தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக ஆளும்கட்சி திணைக்களமும் பொலிஸாரும் பராமுகம் வேலாயுதம் அதிருப்தி-Virekesari – 14.09.2013

அட்டன் நிருபர்,
தேர்தல் விதி¬மு¬றை¬க¬ளுக்கு மாறாக ஆளும் கட்சி வேட்¬பா¬ளர்¬களும் அர¬சோடு இணைந்து செயல்¬ப¬டு¬கின்ற அர¬சியல் கட்¬சி¬களும் அரச வளங்¬களை துஷ்¬பி¬ர¬யோகம் செய்து வரு¬கின்¬றார்கள். தேர்தல் திணைக்¬க¬ளமும், பொலிஸ் அதி¬கா¬ரி¬களும் இவற்றை தெரிந்தும் தெரி¬யா¬த¬தைப்போல் நடந்¬து¬கொள்¬கின்¬றார்கள் என ஐக்¬கிய தேசிய கட்¬சியின் உதவித் தவி¬சா¬ளரும் இலங்கை தேசிய தோட்டத் தொழி¬லாளர் சங்-கத்தின் பொதுச் செய¬லா¬ள¬ரு¬மான கே. வேலா¬யுதம் மஸ்¬கெ¬லிய அப்கொட் தோட்-டத்தில் நடை¬பெற்ற தேர்தல் பிர¬சாரக் கூட்¬டத்தில் உரை¬யாற்¬றும்¬போது குறிப்¬பிட்டார்.

 


அவர் தொடர்ந்து பேசு¬கையில் குறிப்¬பிட்¬ட¬தா¬வது, நீதி¬யான தேர்தல் நடாத்¬தப்¬படும் என அர¬ச¬த¬ரப்¬பினர் கூறி¬வ¬ரு¬கின்ற போதிலும் மக்¬களை அச்¬சு¬றுத்¬தியும் இன்¬னோ¬ரன்ன வழி¬மு¬றை¬களில் இலஞ்சம் வழங்கி மக்¬களின் வாக்¬கு¬களை சூரை¬யாட திட்¬ட¬மிட்டு செயற்¬ப¬டுத்தி வரு¬கின்¬றது. அத்¬துடன் மத்¬திய மாகாண சபைத் தேர்¬த¬லிலே பல சுயேட்சைக் குழுக்¬களை ஏற்¬ப¬டுத்தி அவற்றில் அதி¬க¬மான தமிழ் வேட்¬பா¬ளர்¬களை நிறுத்தி அவ்¬வேட்¬பா¬ளர்¬க¬ளுக்கு 5 இலட்¬சத்¬திற்கும் அதி¬க¬மான ரூபாய்¬களை வழங்கி ஒவ்¬வொரு வாக்¬கெ¬டுப்பு நிலை¬யங்¬க¬ளிலும் 50 வாக்¬குகள் வீதம் கைப்¬பற்¬று¬மாறு அறி-வு¬றுத்தல் கூறி வரு¬கின்¬றது. சுய¬லா¬பத்¬திற்¬காக சங்¬கத்தைக் காட்¬டிக்¬கொ¬டுக்கும் கைக்-கூ¬லி¬க¬ளாக சுயேட்சைக் குழுக்¬க¬ளிலே பலர் களம் இறங்¬கி¬யி¬ருக்¬கின்¬றார்கள். இவ்¬வாறு வாக்¬கு¬களை சித¬ற¬டிப்¬ப¬த¬னூ¬டாக எங்¬க¬ளு¬டைய தமிழ் பிர¬தி¬நி¬தித்¬து¬வத்தை நாம் இழந்து மீண்டும் எம்மை அர¬சியல் அனா¬தை¬க¬ளாக ஆக்க இன்¬றைய ஐக்¬கிய மக்கள் சுதந்¬திர முன்¬ன¬ணியின் சிரேஷ்ட அமைச்¬சர்கள் செயல்¬பட்டு வரு¬வதை மலை¬யக மக்கள் நன்கு அறி¬வார்கள்.
ஐக்¬கிய மக்கள் சுதந்¬திர முன்¬னணி அரசு ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடை-சியில் மனி¬தனைக் கடித்த கதை¬யாக மலை¬யக தொழிற்¬சங்க அர¬சியல் கட்¬சி¬களை சாதிச்¬சண்டை, சங்கச் சண்டை போட வைத்து அவர்¬க¬ளுக்¬கி¬டையில் மோத லை உரு-வாக்கி மலை¬யக மக்¬களின் சக்¬தி¬யையும் தனித்¬து¬வத்¬தையும் சித¬ற¬டித்து அவற்றில் குளிர்¬காய முனைந்து கொண்¬டி¬ருக்¬கின்¬றது.


19 ஆண்¬டு¬க¬ளாக மலை¬யக மக்¬களின் அடிப்¬படைப் பிரச்¬சி¬னைக்கு அர¬சியல் ரீதி¬யான தீர்வைக் காணாது அவர்¬க¬ளது அடிப்¬படை வச¬தி¬க¬ளான காணி, வீட¬மைப்பு போன்¬ற-வற்றைப் பெற்¬றுக்¬கொ¬டுக்¬காது ஆறா¬வது மாகாண சபை தேர்தல் நடை¬பெ¬ற¬வி¬ருக்¬கின்-ற¬போது நான் சொன்¬னதைச் செய்வேன் அதே¬போன்று எதிர்¬கா¬லத்தில் தோட்டத் தொழி¬லா¬ளர்¬களின் லயன்¬களை மாற்றி தனி வீடுகள் அமைத்¬துக்¬கொ¬டுப்பேன் என்று கூறி பசப்பு வார்த்¬தை¬களை அரசு அள்ளித் திணித்¬துக்¬கொண்¬டி¬ருக்¬கின்¬றது.


இவற்றை நம்பி தோட்டத் தொழி¬லா¬ளர்கள் ஏமாந்¬து¬வி¬டாது தமிழ் மக்¬க¬ளது இருப்¬புக்-களை இல்¬லா¬தொ¬ழித்துக் கொண்¬டி¬ருக்¬கின்ற இந்த இன¬வாத ஆட்¬சிக்¬கெ¬தி¬ராக தங்கள் வாக்¬குகளை ஐக்¬கிய தேசிய கட்¬சிக்கு அளித்து எமது வேட்பாளர்களான பாரதிதாசன், ரவீந்திரன், நேரூஜி ஆகியோரை அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.