இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக மீண்டும் வேலாயுதம்

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் 25ஆவது பேராளர் மாநாட்டில் மீண்டும் மூன்றாவது முறையாகவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பொதுச் செயலாளராக கே. வேலாயுதம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 56 வருட காலப்பகுதியில் இதே சங்கத்தில் 46 வருட காலம் பல்வேறு பதவிகளை அவர் வகித்து வந்ததுடன் 2003ஆம் ஆண்டு பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே. வேலாயுதம் ஒன்பது தொழிற்சங்க அமைப்பின் தலைவராகவும், சார்க் நாட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிப் பொதுச் செயலாளர் நாயகமாகவும், சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்திய சபை உறுப்பினராகவும், சர்வதேச தொழிற்சங்க உலக தேசிய பேரவையின் முதல் பதில் உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சங்கத்தின் தலைவராக-ரவீந்திர சமரவீர, பொருளாளராக - ஏ. கதிரேசன், தேசிய அமைப்பாளராக – எஸ்.பி. விஜேகுமாரன், பிரதித் தலைவராக -எம். ரவீந்திரன், உப தலைவர்களாக - எம். சச்சிதானந்தன் (முன்னால் பிரதிக் கல்வியமைச்சர்), எல்.

பாரதிதாசன், சுஜித் பெரேரா, திருமதி. ரத்னகுமாரி, எம். குனதிலக்க, திருமதி. எம்.சிவராணி மற்றும் திருமதி. பி.ஜி. ஷராணி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உதவிச் செயலாளர்களாக எல். நேருஜி (நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்), கே. விஸ்வநாதன் (முன்னால் ஊவா மாகாண சபை உறுப்பினர்), கே. சாந்தகுமார, டப்லிவ்.ஐ. தசநாயக்க, திருமதி. நந்தனி ஜயசிங்க, திருமதி. எம். சாந்திகுமாரி மற்றும் பிரதிப் பொதுச் செயலாளராக திருமதி. சாந்தினி கோங்காகே (முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.